ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவி தொடர்ந்து சண்டை போட்டு கொண்டே இருந்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை

மனைவி தொடர்ந்து சண்டை போட்டு கொண்டே இருந்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை

புதுமாப்பிள்ளை தற்கொலை

புதுமாப்பிள்ளை தற்கொலை

தனது மகனுடன் கவனா அடிக்கடி சண்டை போட்டுவந்ததாகவும், மகனை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு நகை வாங்கிக்கொடுக்குமாறு தொல்லை கொடுத்ததாகவும் மகேஸ்வராவின் தாய் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 24 வயதாகும் மகேஸ்வரா என்பவருக்கும் 21 வயதாகும் கவனா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆனால் சில நாட்களிலேய கவனா தனது கணவர் மகேஸ்வராவை மதிக்காமலும், மகேஸ்வராவின் குடும்பத்தை தவறாக பேசியும் வந்திருக்கிறார். தொடர்ச்சியாக மகேஸ்வராவுக்கு கவனா தொல்லை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மகேஸ்வரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

Also Read : லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்த தலைமை ஆசிரியர்.. தர்ம அடி கொடுத்த மாணவிகள்!

திருமணமாகி சில மாங்களிலேயே மகேஸ்வரா தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் தற்கொலைக்கு கவனா தான் காரணம் என காவல்நிலையத்தில் மகேஸ்வராவின் தாய் ரத்னம்மா புகார் அளித்துள்ளார்.

அவரது புகார் மனுவில், தனது மகனுடன் கவனா அடிக்கடி சண்டை போட்டுவந்ததாகவும், மகனை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு நகை வாங்கிக்கொடுக்குமாறு தொல்லை கொடுத்ததாகவும் மகேஸ்வராவின் தாய் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


First published:

Tags: Bengaluru, Commit suicide, Karnataka