தெலங்கானா மாநிலத்தில் சீர்வரிசையில் பழைய ஃபர்னிச்சரை கொடுத்ததாகக் கூறி மணமகன் திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில் பஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் 25 வயதான முகமது சகாரியா. இவருக்கு 22 வயதான ஹீனா பாத்திமா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
பிப்ரவரி 19 அன்று திருமணம் என தேதி முடிவு செய்து பெண் வீட்டார் தடபுடலாக ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஞாயிறு (பிப். 19) நடைபெறவிருந்த நிலையில், திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் யாரும் வராமல் புறக்கணித்துள்ளனர். பதறிப்போன பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டை தொடர்பு கொண்டதில், அவர்கள் கூறிய காரணம் மணப்பெண்ணின் தந்தையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மணப்பெண் வீட்டார் வழங்கிய வரதட்சனை பொருள்கள் ஏதும் மாப்பிள்ளை வீட்டாருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஏற்கனவே பயன்படுத்திய பழைய பொருள்களை வரதட்சணையாக தந்தாக அதிருப்தி தெரிவித்து திருமணத்திற்கு வராமல் நிறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஒழுங்கின்மையின் உச்சம்.. டெல்லி வரவே பிடிக்கவில்லை.. நாராயண மூர்த்தி பரபரப்பு கருத்து
மேலும், இது குறித்து விசாரிக்க சென்ற மணப்பெண்ணின் தந்தையை தகாத முறையில் நடத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் வரதட்சணை சட்டத்தின் கீழ் புகார் அளித்து வழக்கு பதிவு செய்துள்ளார். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dowry, Dowry Cases, Marriage