மணலி உரத்தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக்கசிவு நடந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, அங்கு ஆய்வு செய்து பின்பு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மணலியில் மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் எனும் உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. அந்த ஆலையையொட்டி நெருக்கமாக வசிக்கும் மக்கள் பலரும் கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக புகார் அளித்தனர். வாயுக்கசிவு ஏற்பட்டதாக வந்த புகாரையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை அடிப்படையாக் கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு தாமகா முன்வந்து வழக்காக எடுத்து இன்று விசாரித்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் வழக்கறிஞர்கள் அப்துல் சலீம் மற்றும் சரவணன் ஆகியோர் இந்த விபத்து தொடர்பாக வாரியத்திற்கு வந்த புகாரை பெற்றவுடன் நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் ஆலையில் அம்மோனியா தேக்கி வைத்திருக்கும் கொள்கலன் அருகே லேசான அளவில் வாயுக்கசிவை உணர முடிந்ததால் வாயுக் கசிவை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் துறையின் சென்னை மண்டல அலுவலக அதிகாரி, மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தும், இந்த நிபுணர் குழுவானது வாயுக்கசிவு ஏற்பட்டதன் காரணம் மற்றும் பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Manali