ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் சைக்கிள் மூலம் மிக நீண்ட பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நர்பத் சிங் ராஜ்புரோகித். 34 வயதான இவருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் ஆர்வம் கொண்டவர். இவரை பார்மரை க்ரீன்மேன் என்று அழைக்கப்படுகிறார்.
இவருக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக நாடு முழுவதும் சைக்கிள் மூலமாகவே பயணம் செய்ய திட்டமிட்டார். 2019 ஜனவரியில் தனது பயணத்தை ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய இவர் 2022 ஏப்ரலில்தான் தனது சொந்த மாநிலமான ஜெய்ப்பூரில் நிறைவு செய்தார். இந்த பயணத்தின்போது பல சவாலான அனுபவங்களை அவர் சந்தித்துள்ளார்.
அவரின் பயணம் சில மாதங்களிலேயே கொரோனா தொற்று காரணமாக முடங்கியது. இந்த லாக்டவுன் காலக்கட்டத்தில் இவர் தமிழ்நாட்டிலும் இருந்துள்ளார். இந்த பயணத்தின்போது விபத்தில் சிக்கி இவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும் தேவையான சிகிச்சையை எடுத்துக்கொண்டு மனம் தளராமல் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
2019 ஆண்டு 27 ஜனவரி ஆம் தேதி அன்று சைக்கிள் பயணத்தை தொடங்கிய இவர் 20 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள் பயணித்து 30,121.64 கிலோமீட்டர் தூரத்தை கடந்தார். இந்த விழிப்புணர்வு பயணத்திற்கு 3 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 24 நாட்கள் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் மொத்த வனப்பரப்பு அளவு 2,261 சதுர கிமீ அதிகரித்துள்ளது - மத்திய அரசு தகவல்
ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் பயணம் மேற்கொண்ட இவர் தனது பயணத்தின்போது சுமார் 93,000 மரக்கன்றுகளை நட்டுள்ளார். மேலும், 1,400 - 1,500 இடங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக கூட்டம் நடத்தியுள்ளார். உன்னத நோக்கத்துடன் இவர் மேற்கொண்ட பயணத்தை கின்னஸ் அமைப்பு இவருக்கு சான்றிதழை தந்து கவுரவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.