சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு ‘கிரேட் நியூஸ்’: பிரதமர் மோடி பாராட்டு

சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு ‘கிரேட் நியூஸ்’: பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி

நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி, வன விலங்குகள் பாதுகாப்பான வாழ்விடங்களில் வசிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

  • Share this:
நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி, வன விலங்குகள் பாதுகாப்பான வாழ்விடங்களில் வசிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதற்குத்தான் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு மதிப்பீட்டில் இதன் எண்ணிக்கை 7,910 ஆக இருந்தது. தற்போது 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், அதிகபட்சமாக முறையே 3,421, 1,783 1,690 சிறுத்தைகள் தற்போது உள்ளன.

இந்தியாவில் புலிகளை கண்காணிக்கும் முறை, சிறுத்தைகள் போன்ற இனங்களையும் கணக்கிட வழிவகுத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில்தான், சிறுத்தைகள் எண்ணிக்கையும் மதிப்பிடப்பட்டன, என்று பிரகாஷ் ஜவடேகர் திங்களன்று தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“கிரேட் நியூஸ்! சிங்கங்கள், புலிகள் எண்ணிக்கைக்குப் பிறகு சிறுத்தைகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இந்த முயற்சிகளை விட்டு விடாமல் தொடர்ந்து மேற்கொண்டு நம் விலங்குகள் பாதுகாப்பான வாழ்விடங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”

இவ்வாறு கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

-(ஏஜென்சி தகவல்களுடன்)
Published by:Muthukumar
First published: