நள்ளிரவில் சட்டமன்றக் கூட்டத் தொடரா?- மேற்கு வங்க ஆளுநர் அனுமதியின் பின்னணி என்ன?
நள்ளிரவில் சட்டமன்றக் கூட்டத் தொடரா?- மேற்கு வங்க ஆளுநர் அனுமதியின் பின்னணி என்ன?
மம்தா பானர்ஜி- ஜக்தீப் தன்கர்
வியாழக்கிழமை பிற்பகல் 2.26 மணிக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில், அதிகாலை 2 மணிக்கு சட்டசமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட மேற்கு வங்க ஆளுநர் தன்கர் அதிகாரப்பூர்வ உத்தரவை ட்வீட் செய்தார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை பிற்பகல் 2.26 மணிக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில், அதிகாலை 2 மணிக்கு சட்டசமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட மேற்கு வங்க ஆளுநர் தன்கர் அதிகாரப்பூர்வ உத்தரவை ட்வீட் செய்தார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அரசியலமைப்புச் சட்டத்தின் 174 (1) வது பிரிவின்படி, அமைச்சரவை முடிவை ஏற்று, மார்ச் 07, 2022 அன்று அதிகாலை 2.00 மணிக்கு சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டம் நள்ளிரவு 2 மணிக்கு மேல் என்பது அசாதாரணமானது மற்றும் வரலாறானது, ஆனால் அது அமைச்சரவையின் முடிவு" என்று ஆளுநர் தன்கர் தெரிவித்தார்.
ஆனால் இப்போது சட்டசபைக் கூட்டத்தொடர் நேரம் கணிசமான குழப்பங்களை உருவாக்கியது. சில மணி நேரம் கழித்து, மேற்கு வங்க சட்டமன்ற சபாநாயகர் பிமன் பானர்ஜி, கூட்டத்தின் நேரம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது, தட்டச்சுப் பிழை என்றும், கவர்னர் அதை புறக்கணித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் பிமன் பானர்ஜி கூறும்போது, “அதிகாலை 2 மணிக்கு சட்டமன்றத்தைக் கூட்டும் முடிவு என்பது தட்டச்சுப்பிழையினால் ஏற்பட்டது, இதனை கவர்னர் புறக்கணித்திருக்கலாம். இதற்கு முன்னால் அனுப்பிய 2 கடிதங்களிலும் மதியம் 2 மணிக்கு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு டைப்பிங் பிழையாக வெளிவந்த அதிகாலை 2 மணிக்குக் கூட்டம் என்பதனை கவர்னர் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவரும் அனுமதி அளித்துள்ளார்! இப்போது அமைச்சரவைதான் மீண்டும் கூடி முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் நான் அதிகாலை 2 மணிக்கு சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட பணிக்கப்படுவேன் ஏனெனில் கவர்னர் அந்த நேரத்திற்கு அனுமதியளித்து விட்டதனால்” என்றார்.
அன்றைய தினம், மம்தா பானர்ஜி ஆளுநரை அழைத்து இது தட்டச்சுப் பிழை என்று கூறியதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாநில அரசு கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில் ஒரு வரியை தவிர, மதியம் 2 மணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிப்ரவரி 28 ஆம் தேதி புதிய அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். பிற்பகல் 2 மணிக்கு சட்டசபையை கூட்டுவதற்கு அமைச்சரவையில் இருந்து ஆளுநருக்கு புதிய திட்டம் அனுப்பப்படும்,” என்று டிஎம்சி செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறினார்.
ஆனால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கவர்னனரை விமர்சித்து, இது "குழந்தைத்தனமான செயல்" என்று கூறியது. இது மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு எதிரான "பழிவாங்கும்" அணுகுமுறையின் வெளிப்பாடு என்று சாடியுள்ளது.
பாஜக இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மம்தாவையும் திரிணாமூல் கட்சியையும் கடுமையாக சாடியது, “இது கற்பனை செய்ய முடியாதது மற்றும் முற்றிலும் விதிவிலக்கானது. ஆனால் கட்சியின் பெயர் டிஎம்சி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி என்பதால், அது அவர்களுக்கு பொருந்தும். அவர்கள் ஒரு இருண்ட கட்சி, அவர்கள் இருட்டில் அனைத்தையும் செய்ய விரும்புகிறார்கள். பட்டப்பகலில் மக்களை எதிர்கொள்ளும் நிலையை படிப்படியாக இழந்து வருகின்றனர். அனைவரும் உறங்கும் போது இருட்டில் சபையை நடத்துவார்கள்” என்று பாஜக கடுமையாகச் சாடியுள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.