பசுமாடு தாக்குதலில் இருந்து பேரனைக் காப்பாற்றி உயிரிழந்த மூதாட்டி!

news18
Updated: August 4, 2019, 2:08 PM IST
பசுமாடு தாக்குதலில் இருந்து பேரனைக் காப்பாற்றி உயிரிழந்த மூதாட்டி!
சிசிடிவி காட்சிகள்
news18
Updated: August 4, 2019, 2:08 PM IST
உத்தரப்பிரதேசத்தில் தனது 4 வயது பேரனை பசுமாடு தாக்குதலில் இருந்து காப்பாற்றி, தனது உயிரை 70 வயது மூதாட்டி இழந்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான விமலா சிங். கடந்த வியாழன் அன்று அப்பகுதியில் தனது 4 வயது பேரன் விஷ்னு உடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மாடு ஒன்று சிறுவனை முட்ட முயற்சித்துள்ளது.

இதனை அடுத்து, குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் விமலா சிங் ஈடுபட்டு, மாட்டை விரட்ட முயற்சித்துள்ளார். ஆனால், பசுமாடு தொடர்ந்து இருவரையும் குறிவைத்து முட்டியது. ஒரு கட்டத்தில் கீழே விழுந்தார்.


அப்போதும், தனது பேரனைக் காப்பாற்ற தனது கைகளுக்குள் அணைத்துக்கொண்டார். விமலா சிங் மீது பசுமாடு சரமாரியாக காலால் மிதித்து நடந்தது. சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மாட்டை விரட்டி விட்டனர்.மாடு தாக்கியதால் பலத்த காயமடைந்த விமலா சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...