உத்தரகாண்ட்டைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது மகன்களின் படிப்பிற்காக அதிக பணம் செலவழித்ததாகவும், அத்தோடு, தற்போது அவர்களுக்கு வீடும் கட்டியிருப்பதால் பணத்தட்டுப்பாடு அடைந்துள்ளனர். இதனால் தனது மகன் மற்றும் மருமகள் தங்களுக்கு 5 கோடி தரவேண்டும் அல்லது ஒரு வருடத்திற்குள் பேரக்குழந்தையை கொடுக்க வேண்டுமென்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த தம்பதியினர் அளித்துள்ள புகார் மனுவில், தங்களது மகனை அமெரிக்காவில் படிக்கவைக்க தன்னிடமிருந்த மொத்த பணத்தையும் கொடுத்ததாகவும், கடன் வாங்கி வீடு கட்டியுள்ளதாகவும், இதனால் பொருளாதாரத்திலும், மனதளவிலும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியதாக கூறியுள்ளனர்.
இதனிடையே, 2016ம் ஆண்டு மகனுக்கு திருமணம் முடிந்த நிலையில் பேரக்குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்துள்ளனர். அதுவும் நடக்காத நிலையில் மனமுடைந்த தம்பதியினர் மகன் மற்றும் மருமகள் தங்களுக்கு 5 கோடி தரவேண்டும் அல்லது பேரக்குழந்தை பெற்று தரவேண்டுமென்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் தடை.. சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
தம்பதியினரின் வழக்கறிஞர் இதுகுறித்து பேசுகையில், இந்த வழக்கு நமது சமுதாயத்தின் நிலையை தெளிவாக விளக்குகிறது. பெற்றோர் தங்களது குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து, பெரும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அளவிற்கு வளர்த்து விடுகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடமிருந்து குறைந்த பட்ச பொருளாதார உதவி பெற கடமைப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttarkhand