எதிர்க்கட்சிகள் ஒன்று திரள வேண்டுமென மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் – ராகுல் காந்தி

news18
Updated: June 13, 2018, 4:27 PM IST
எதிர்க்கட்சிகள் ஒன்று திரள வேண்டுமென மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் – ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
news18
Updated: June 13, 2018, 4:27 PM IST
பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரள வேண்டுமென மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியையும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் விருப்பம் அல்ல, பொதுமக்களின் விருப்பம்.

பிரதமர் மோடியும், பாஜகவும் அரசியல் சாசனத்தை மட்டுமல்லாது, அரசின் பிற அமைப்புகளையும் அவமதித்து வருகிறது. இதை எவ்வாறு தடுப்பது என்பதே பொதுமக்கள் முன் உள்ள கேள்வி. எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தபோது, கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 130 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது, இது 70 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

எனினும், இதற்குண்டான பலன் சாதாரண குடிமகனை சென்றடையவில்லை. விலைகுறைப்பால் கிடைக்கும் லாபமெல்லாம் குறிப்பிட்ட 15 – 20 செல்வந்தர்களின் கணக்கில் போய் சேருகிறது.

பொதுமக்கள் பலன்பெறும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டுமென எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தின. எனினும், மோடிக்கு இதில் விருப்பமில்லை என்றார் ராகுல் காந்தி.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...