சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்- பினராயி விஜயன் உறுதி

சபரிமலை செல்லும் அனைவருக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்- பினராயி விஜயன் உறுதி
பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: October 16, 2018, 11:37 AM IST
  • Share this:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடைதிறக்கப்பட உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கோவிலுக்கு வரும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை, எதிர்த்து தமிழகம் மற்றும் கேரளாவில் பல போராட்டங்கள் நடந்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துவோம் என கேரள அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கேரளாவில் பாஜக நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தியது.


கோப்பு படம்


மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்பட உள்ள நிலையில், எல்லா பெண்களும் உள்ளே நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டங்கள் நடக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறுகையில், “சபரிமலைக்குள் வரும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். சட்டம் - ஒழுங்கை வேறு யாரும் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படாது. தீர்ப்பு அனைத்து வகையிலும் செயல்படுத்தப்படும்” என தெரிவித்தார்.
First published: October 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்