காஷ்மீர் குறித்து வதந்திகள்! எட்டு ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு கோரிக்கை

காஷ்மீர் விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: August 12, 2019, 8:55 PM IST
காஷ்மீர் குறித்து வதந்திகள்! எட்டு ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு கோரிக்கை
ட்விட்டர்
news18
Updated: August 12, 2019, 8:55 PM IST
காஷ்மீர் நிலவரம் குறித்து தவறான செய்திகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் இணைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று பக்ரீத்தை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீர்


இந்தநிலையில், காஷ்மீர் விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், ‘குறிப்பிட்ட எட்டு ட்விட்டர் கணக்குகளிலிருந்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன. பிரிவினைவாதத் தலைவர்களான செய்யது அலி ஜிலானியின் வாய்ஸ் ஆஃப் காஷ்மீர்(Voice of Kashmir (@kashmir787)), மதிஹாசாஹில் கான்(@Red4Kashmir),அர்ஷத் ஷெரிப்Arshad Sharif (@arsched), மாரி ஸ்குல்லி Mary Scully (@mscully94), செய்யது அலி ஜிலானி Syed Ali Geelani (@sageelaniii), @sadaf2k19, and @RiazKha723, and @RiazKha61370907 ஆகிய எட்டு ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Also see:

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...