ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கம்?

ஓட்டுநர் உரிமம்

போக்குவரத்து வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

  • News18
  • Last Updated :
  • Share this:
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி கட்டுப்பாடுகளை நீக்க முடிவுசெய்துள்ளதாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று ஹரியானா அரசு வலியுறுத்தியது. அதனடிப்படையில், கல்வித் தகுதி கட்டுப்பாடுகளை நீக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான வரைவு அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும், சாலைப் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்க முடியாது என்பதால், ஓட்டுர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கவும், திறனறி சோதனைகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கான மசோதா சென்ற மக்களவை கூட்டத்திலியே நிறைவேறியுள்ளதாகவும், விரைவில் இது அமலுக்கு வரும் போது ஓட்டுநர்கள் தட்டுப்பாடுகள் தீரும் என்றும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அண்மையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் எழுத படிக்க் தெரியாதவர்களுக்கு கன ரக வாகனங்ள் ஓட்டுநர் உரிமம் அளிப்பதை நிறுத்தக் கூறி பரிந்துறைத்தும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published: