பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.41,000 கோடி மூலதனம்: மத்திய அரசு திட்டம்

ஏற்கனவே 23,000 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 83,000 கோடி ரூபாயை பயன்படுத்த முடியும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.41,000 கோடி மூலதனம்: மத்திய அரசு திட்டம்
நிதியமைச்சர் அருண் ஜெட்லி
  • News18
  • Last Updated: December 21, 2018, 12:10 PM IST
  • Share this:
பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதலாக 41,000 கோடி ரூபாய் மறுமூலதனம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதோடு சேர்த்து நடப்பு நிதியாண்டில் இனிமேல் 83,000 கோடி ரூபாயை வங்கிகள் பயன்படுத்த முடியும்.

நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில், பொதுத்துறை வங்கிகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த மூலதனமாக 65,000 கோடி ரூபாய் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த நிதியாண்டில் மேலும் 41,000 கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த 65,000 கோடி ரூபாயில், இதுவரை 23,000 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதன்படி, இன்னும் 42,000 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த ஆண்டில் கூடுதலாக 41, 000 கோடி ரூபாய் மூலதனமாக அளிக்க உள்ளதாகவும், இதன்மூலம், இந்த ஆண்டில் செய்யப்படும் மூலதன அளவு ஒரு 1,06,000 கோடி ரூபாயாக உயரும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ஏற்கனவே 23,000 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 83,000 கோடி ரூபாயை பயன்படுத்த முடியும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.முன்னதாக, வங்கிகளுக்கு 2 ,11,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Also see... பிரதமர் வேட்பாளர்களின் கதை
First published: December 21, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading