பசுக்கள் குறித்த ஆர்வம் ஏற்படுத்த தேசிய அளவிலான தேர்வு இணையவழியில் நடத்தப்படும்.. மத்திய அரசு அறிவிப்பு..
பசுக்கள் குறித்த ஆர்வம் ஏற்படுத்த தேசிய அளவிலான தேர்வு இணையவழியில் நடத்தப்படும்.. மத்திய அரசு அறிவிப்பு..
கெள விஞ்ஞான் தேர்வு அறிவிப்பு
பசுக்கள் மற்றும் பசுக்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து, துறை மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைப்பதில் பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கதிரியா பகிர்ந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
மாணவர்களும், நாட்டு மக்களும், நாட்டு வகைப் பசுக்களைக் குறித்த ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, கெள விஞ்ஞான் என்னும் பசு அறிவியல் என்னும் தேசிய அளவிலான தேர்வை வருகின்ற பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி இணையவழி விருப்பத்தேர்வாக நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் (ஆர்.கே.ஏ) ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வை நடத்தவுள்ளது என ஆர்.கே.ஏ தலைவர் வல்லபாய் கதிரியா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். மேலும், தொடக்க, இடைநிலை மற்றும் கல்லூரி அளவிலான மாணவர்களும், பொது மக்களும் 'காம்தேனு கெள விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் தேர்வில் பங்கேற்கலாம். தேர்வுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.ஏ பசு அறிவியல் பற்றிய ஆய்வுக்கான புத்தகங்களையும் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் உள்ள கேள்விகள் தேர்ந்தெடுத்து எழுதும் வினா வகையில் இருக்கும், பாடத்திட்டங்கள் ஆர்.கே.ஏ இணையதளத்தில் பகிரப்படும், முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.ஏ தலைவர் பி.டி.ஐ-க்கு அளித்துள்ள பேட்டியில் "தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். பசுக்கள் மற்றும் பசுக்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து, துறை மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைப்பதில் பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கதிரியா பகிர்ந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
Published by:Gunavathy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.