100 நாளில் 10 லட்சம் நீர் மேலாண்மை திட்டங்களை நிறைவேற்றுவோம் - மத்திய அரசு

ஜல் சக்தி அபியான் திட்டம் மூலமும் நீர் நிலைகளை மேம்படுத்தும் பணி நடக்கும் என்கிறார் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமர்ஜித் சிங்.

Web Desk | news18
Updated: July 4, 2019, 12:11 PM IST
100 நாளில் 10 லட்சம் நீர் மேலாண்மை திட்டங்களை நிறைவேற்றுவோம் - மத்திய அரசு
மாதிரிப்படம் (PTI)
Web Desk | news18
Updated: July 4, 2019, 12:11 PM IST
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் புதிய அரசின் முதல் 100 நாட்களுள் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் 10 லட்சம் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பல திட்டங்களும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய மத்திய அரசு தன்னுடைய ஆட்சியின் முதல் 100 நாட்களுக்குள் 10 லட்சம் திட்டங்களை நிறைவேற்ற உறுதி ஏற்றுள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியில் 60 சதவிகித நிதி இயற்கை மேலாண்மைக்காகவே செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கிராம மக்களுக்கான ஒரு வருவாயும் ஏற்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம் விவசாய நிலங்கள் மேம்படுத்தப்பட்டு அறுவடையும் அதிகரித்துள்ளது.

ஜல் சக்தி அபியான் திட்டம் மூலமும் நீர் நிலைகளை மேம்படுத்தும் பணி நடக்கும் என்கிறார் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமர்ஜித் சிங். இத்திட்டத்தின் மூலமாகவே அணைக்கட்டுகள் பராமரிப்பு, ஏரி மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி, பாரம்பரிய நீர் நிலையங்கள் பராமரிப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் பார்க்க: வேலூரில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க களத்தில் இறங்கிய கிராம பெண்கள்..!
First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...