என்.ஆர்.சி. தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன - உள்துறை அமைச்சகம் விளக்கம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  அசாம் மாநில தேசிய குடியுரிமை பதிவேட்டு தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

  அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) தகவல்கள் அனைத்தும்  'www.nrcassam.nic.in' இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும்.

  சில தினங்களுக்கு இந்தத் தளத்தில் OFFLINE எனக் காட்டியதால் பொது மக்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், என்.ஆர்.சி. தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

  தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாகவே தகவல்கள் இணையதளத்தில் தெரியவில்லை என்றும், விரைவில் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

  Also see:
  Published by:Rizwan
  First published: