• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Petrol Diesel Price | பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி 2020-21-ல் 88% உயர்த்தப்பட்டுள்ளது- மத்திய அரசு

Petrol Diesel Price | பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி 2020-21-ல் 88% உயர்த்தப்பட்டுள்ளது- மத்திய அரசு

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த 2020, ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரை 88 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெலி இன்று மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.

  • Share this:
    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த 2020, ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரை 88 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெலி இன்று மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.

    பெட்ரோல் விலை நாடு முழுதும் லிட்டருக்கு ரூ.100-ஐக் கடந்து விட்டது, டீசல் விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சாமானிய மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு அதிகரித்து வருகின்றன. டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.100ஐ நெருங்கி வருகிறது, அல்லது விரைவில் ரூ.100 என்ற விலையை எட்டி விடும்.

    இந்நிலையில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறியதாவது:

    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த 2020, ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரை 88 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த உற்பத்தி வரி வசூல் ரூ.1.78 லட்சம் கோடியாகத்தான் இருந்தது.

    இதையும் படிங்க: Petrol Diesel Price Today | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: உங்க ஊரில் எவ்வளவு?

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மீதான உற்பத்தி வரி கடந்த ஆண்டு லிட்டருக்கு ரூ.19.98 பைசாவாக இருந்த நிலையில், இந்த வரி உயர்வால் தற்போது ரூ.32.90 ஆக அதிகரித்துள்ளது. டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.15.83 ஆக இருந்த நிலையில், தற்போது லிட்டருக்கு ரூ.31.80 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உற்பத்தி வரி வசூல் அதிகமாதத்தான் இருந்தது. ஆனால், கரோனா லாக்டவுன் காரணமாக டீசல், பெட்ரோல் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. கடந்த 2018-19ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.2.13 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. கடந்த நிதியாண்டில் உற்பத்தி வரி மட்டும் ரூ.3.89 லட்சம் கோடி வசூலானது. பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு என்பது சந்தையில் நிலவும் விலைக்கு ஏற்ப முடிவாகிறது.

    சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்துக்கு ஏற்பவும், டாலர் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு ஏற்பவும் எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை மாற்றி அமைக்கின்றன.

    இவ்வாறு கூறினார் மத்திய அமைச்சர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: