வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார்... மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதி...

வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார்... மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதி...

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதி...

விவசாயிகளின் உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தயார் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதியளித்துள்ளனர்.

  • Share this:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ளது..இந்த சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கவும், இது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கவும் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், விவசாயிகள் இதை ஏற்கவில்லை.

இந்நிலையில, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ”விவசாயிகள் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதால், வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தயாராக உள்ளது என்றார். விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது. விவசாயிகளை மதிப்பதில் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. எனவே வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.அதற்காக இந்த சட்டங்களில் குறைபாடு இருப்பதாக அர்த்தம் அல்ல. விவசாயிகள் தொடர்ந்து போராடுவதால், அவர்களின் உணர்வுகளை மதித்தே இந்த பரிந்துரையை அரசு கூறியுள்ளது” என்றார்.

மேலும் படிக்க... நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதி வேட்பாளர்கள் இன்று அறிமுகம் - கொளத்தூரில் சீமான் போட்டி?உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: