புற்றுநோய், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற சில முக்கியமான மருந்துகளின் விலையை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் கணிசமாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
60% க்கும் அதிகமான நோயாளிகள் மருந்துக்காக அதிகம் செலவு செய்கின்றனர். சுகாதாரச் செலவைக் குறைப்பதன் மூலம் பல நோயாளிகளுக்கு பண ரீதியாகவும் நிவாரணம் அளிக்க முடியும் என்ற நோக்குடன் அரசாங்கம் சில பரிந்துரைகளை தயாரித்துள்ள நிலையில், அறிவிப்பு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பரிசீலனையில் உள்ளது.
சில முக்கியமான மருந்துகளின் அதிக விலையை ஒழுங்குபடுத்துவதில் அரசு ஆர்வமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அரசின் முன்மொழிவு நிறைவேறினால், 70% வரை விலைக் குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது. தற்போது பரவலாக புழக்கத்தில் உள்ள மருந்துகளை, 2015 ஆம் ஆண்டு தேசிய அத்தியாவசிய மருத்துவப் பட்டியலில் (NLEM) சேர்க்கவும் முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது.
இந்தியாவில் இருக்கும் கண்ணைக் கவரும் கலப்பின கோவில்கள்!
சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த முன்மொழிவு குறித்து விவாதிக்க மருந்துத் துறையின் பிரதிநிதிகளை ஜூலை 26 ஆம் தேதி சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். மருந்துகளின் விலைகளின் பகுப்பாய்வுபடி, சில மருந்துகளின் வர்த்தக வரம்பு 1000% வரை அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது.
தற்போது, மருந்து விலைக் கட்டுப்பாட்டாளர் NPPA, NLEM இல் இருக்கும் 355 மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்துகிறது. அத்தகைய திட்டமிடப்பட்ட மருந்துகளின் வர்த்தக வரம்புகள் மொத்த விற்பனையாளர்களுக்கு 8% மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு 16% என கட்டுப்படுத்தப்படுகிறது.
அரசாங்கத்தின் நேரடி விலைக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மற்ற அனைத்து மருந்துகளுக்கும் விலையை நிர்ணயிக்க நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு. அத்தகைய மருந்துகளின் விலையை ஆண்டுதோறும் 10% மட்டுமே அதிகரிக்க முடியும். இத்தகைய மருந்துகளின் வர்த்தக வரம்பு மிக அதிகமாக உள்ளதோடு, நோயாளிகளை வணிக ரீதியில் பாதிக்கிறது.
பிப்ரவரி 2019 இல், பொது நலன் கருதி DPCO இன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி சோதனை அடிப்படையில் 41 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் வர்த்தக வரம்புகளை 30% வரை NPPA கட்டுப்படுத்தியது. இதன் விளைவாக 526 பிராண்டுகளின் MRP இல் 90% குறைக்கப்பட்டது. மேலும், கரோனரி ஸ்டென்ட் மற்றும் முழங்கால் மருந்துகளின் விலையையும் அரசு நிர்ணயித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Medicine, Price Cut