திருமணம் போன்ற நிகழ்வுகளால் கொரோனா வேகமாக பரவுகிறது - மத்திய அரசு விளக்கம்

திருமணம் போன்ற நிகழ்வுகளால் கொரோனா வேகமாக பரவுகிறது - மத்திய அரசு விளக்கம்

மாதிரிப் படம்

திருமணம் போன்ற நிகழ்வுகளின் காரணமாக கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து குறைந்தவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் இந்தியா அளவில் 40,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 1,000-த்தைக் கடந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு, ‘கொரோனா பாதிப்பு குறைந்த மாதங்களில் மக்கள் மிகவும் அலட்சியமாக இருந்துள்ளனர்.

  திருமணம் போன்ற கூட்டம் கூடும் நிகழ்வுகளில் மக்கள் மிகவும் அலட்சியமாக இருந்துள்ளது தெரிகிறது. இன்னமும், ஏராளமான மக்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக, கிராமப் புறங்களில் பாதிக்க வாய்ப்பு அதிகம். கொரோனா அதிகம் பரவ வாய்ப்புள்ள இடங்களான திருமணம் போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கவேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் ஆர்.டி. பி.சி.ஆர் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

  கொரோனா பரவல் குறித்து நியூஸ்18 பேட்டியளித்த தேசிய கொரோனா பணிக்குழுவின் செயல்பாட்டு ஆராய்ச்சி குழு தலைவர் என்.கே.அரோரா, ‘கொரோனா இரண்டாவது அலையின் மத்தியில் நாம் இருக்கிறோம். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றால் அடுத்த 6-8 வாரங்களில் 1,00,000 புதிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: