கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட மிக மிக குறைவானவர்களுக்கே இந்த அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றன. அதிலும் இதுவரை ஒருவர் மரணித்துள்ளார் என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

  • Share this:
    முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு அவர்களது உடலில் 75 சதவிகித நோய் எதிர்ப்பு சக்தி வந்து விடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். கொரோனாவின் தாக்கத்தல் இருந்து முழுமையாக விடுபட தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் தீர்வாக அமையும் என மக்களை அவர் அறிவுறுத்தினார்.

    இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 68 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, அது ஓரிரு நாட்களில் குணமானது. அது இயல்பானது தான் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்து வந்தனர்.

    இதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 16, 19 ஆகிய தினங்களில் 21 மற்றும் 22 வயதான தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர்களுக்கு அனபைலக்ஸிஸ் (Anaphylaxis) என்ற ஒருவகையான அலர்ஜி நோய் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில நாட்களில் குணமாகி வீடு திரும்பியிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்ததில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவர் அலர்ஜி ஏற்பட்டு மரணித்தது தெரியவந்துள்ளது. 68 வயதான அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 31 மரணங்களை ஆய்வு செய்த போது தடுப்பூசியினால் சில பிரச்சனைகள் இருந்தாலும், மரணத்திற்கு தடுப்பூசியுடன் முழு தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. அதில் இரண்டு மரணங்கள் முற்றிலும் காரணம் எதுவும் தெரியாமல் இருந்துள்ளது. மேலும் 7 மரணங்கள் அதில் நிச்சயமற்றது என்றும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது.

    ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இந்த அலர்ஜி நோய் ஏற்படும் வாய்ப்பு 0.01 சதவிகிதம் தான் உள்ளன. அதிலும் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் குறைவு என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 16 முதல் ஜூன் 7 வரை 26,200 நபர்களுக்கு இந்த அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட மிக மிக குறைவானவர்களுக்கே இந்த அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றன. அதிலும் இதுவரை ஒருவர் மரணித்துள்ளார் என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மேலும் கொரோனாவினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் பாதிப்புகளை ஒப்பிடுகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் பாதுகாப்பானது.

    Also read: அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு!

    தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கொரோனாவின் தீவிர பாதிப்பில் இருந்து மீண்டிருக்கிறார்கள். மேலும் நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. மக்கள் பொருளாதார ரீதியான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதே இந்தியா இந்த பாதிப்புகளில் இருந்து மீளும் வாய்ப்பாக அமையும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
    Published by:Esakki Raja
    First published: