ஹோம் /நியூஸ் /இந்தியா /

RTI தபாலை திருப்பி அனுப்பிய ஸ்கூல் ஹெட்மாஸ்டர் - ₹25000 அபராதம் விதித்த தகவல் ஆணையர்

RTI தபாலை திருப்பி அனுப்பிய ஸ்கூல் ஹெட்மாஸ்டர் - ₹25000 அபராதம் விதித்த தகவல் ஆணையர்

மாதிரி படம்

மாதிரி படம்

RTI விண்ணப்பத்தை அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்தால், விண்ணப்பதாரர், முதல் மேல்முறையீட்டிற்குப் பதிலாக, RTI சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் நேரடியாக ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்று சிங் தெளிவுபடுத்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madhya Pradesh, India

  மத்திய பிரேதசத்தில் அரசாங்க அலுவலங்களுக்கு RTI இருந்து வரும் விண்ணப்பங்களை மறுக்க கூடாது என்றும் மீறினால் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

  மத்திய பிரதேசத்தில் சட்னா மாவட்டத்தின் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராம்னிவாஸ் குஷ்வாஹா RTI இருந்து வந்த ரிஜிஸ்டர் தபால் விண்ணப்பத்தை மறுத்துள்ளார். இதற்கு மாநில தகவல் ஆணையர் ராகுல் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் ஆர்டிஐ விண்ணப்பத்தை மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரவித்துள்ளார்.

  இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசரியரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஆர்டிஐ விண்ணப்பத்தை ஏற்க மறுக்கவில்லை என்றுள்ளார். மேலும் தனது சார்பாக யார் மறுத்தார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறினார். தலைமையாசிரியர் தனக்குச் சாதகமாக எந்த ஆதாரத்தையும் வழங்கத் தவறியதால், மாநில தகவல் ஆணையர் தலைமை ஆசிரியருக்கு ரூ. 25000 அபராதம் விதித்தார்.

  Also Read : அடுத்த ஆண்டு முதல் முதுநிலை மருத்துவப்படிப்பு நீட் ரத்து?

  மத்திய பிரதேச மாநில தகவல் ஆணையர் ராகுல் சிங்க் கூறுகையில், அரசு அலுவலகங்கள் ஆர்டிஐ மூலம் வந்த விண்ணப்பத்தை மறுப்பதன் மூலம் அவர்கள் தகவல் சொல்ல மறுக்கிறார்கள். தகவல்கள் வெளிவர தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் தங்களிடம் பெறப்படாததால், தகவல் மறுக்கப்பட்டதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நினைக்கினறனர்.

  RTI விண்ணப்பத்தை அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்தால், விண்ணப்பதாரர், முதல் மேல்முறையீட்டிற்குப் பதிலாக, RTI சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் நேரடியாக ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்று சிங் தெளிவுபடுத்தினார்.

  இதற்கு முன்பும் பல வழக்குகளில் RTI விண்ணப்பத்தை நிராகரித்ததற்காக அதிகாரிகளுக்கு எதிராக ராகுல் சிங் அபராதம் விதித்தார். இந்த வழக்கிற்கு முன்பு, சிங்ராலியில் உள்ள காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி எதிராக ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Madya Pradesh, RTI