முல்லை பெரியாறு அணை உறுதியாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாக, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதனடிப்படையில், அணையில் நவம்பர் 10ம் தேதி வரையில் 139 அடி அளவிற்கும், அதற்கு பின் 142 அடி அளவிற்கும் நீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 139 அடியாக உயர்த்துவதற்கே கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அணையை சுற்றியுள்ள இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், 3 மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அணைக்கு வரும் நீரை முழுமையாக வெளியேற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அணையின் உறுதித்தன்மை தொடர்பான மத்திய அரசின் மேற்பார்வை குழுவின் அறிக்கை, ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என கேரள அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. அணையில் சேமிக்கும் நீர் மட்டத்தின் அளவை மேலும் குறைக்க வேண்டும் எனவும், நீர் சேமிப்பிற்கான புதிய RULE CURVE-ஐ உருவாக்கவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து, முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் வரும் 11ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.