• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட வழங்கிய அனுமதியை ரத்து செய்த கேரள அரசு!

பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட வழங்கிய அனுமதியை ரத்து செய்த கேரள அரசு!

பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட வழங்கிய அனுமதியை ரத்து செய்த கேரள அரசு!

பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட வழங்கிய அனுமதியை ரத்து செய்த கேரள அரசு!

முல்லைப்பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழ் உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்வதாக, அம்மாநில அமைச்சர் சசீந்திரன் அறிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    பேபி அணையை வலுப்படுத்திய பின்னர் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    பேபி அணையை வலுப்படுத்துவதற்கு அதன் கீழ் உள்ள 15 மரங்களை வெட்டி அகற்ற அனுமதிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் அந்த 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். கேரள அரசுக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் அனுப்பியிருந்தார்.

    இந்நிலையில், திடீர் திருப்பமாக பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்படுவதாக கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார்.

    மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு கேரளாவில் எதிர்ப்பு எழுந்ததால் அனுமதியை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: