முகப்பு /செய்தி /இந்தியா / எரிபொருள் விலை குறைப்பு என்று மக்களை முட்டாளாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி

எரிபொருள் விலை குறைப்பு என்று மக்களை முட்டாளாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Petrol price | பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என உயரத் தொடங்கும் என ராகுல் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எரிபொருள் விலை குறைப்பு என்று அறிவித்து மக்களை முட்டாளாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.

இந்தியாவில் டீசல் விலை வரலாறு காணாத உச்சமாக ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதேபோல பெட்ரோல் விலையும் ரூ.110-ஐ கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை தாங்கிக்கொள்ள முடியாமல் மக்கள் திணறி வந்தனர். தொடர்ந்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுகிறது. கலால் வரி குறைப்பால் பெட்ரோல் மீது ரூ.9.50ம், டீசல் மீது ரூ.7ம் விலை குறையும்.

இந்த விலை குறைப்பின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எரிபொருள் விலை குறைப்பு என்று அறிவித்து மக்களை முட்டாளாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் தனது டிவிட்டரில் கூறியதாவது, பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என உயரத் தொடங்கும். உண்மையான நிவாரணத்தை மக்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

பணவீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணத்தை பெற பொதுமக்களுக்கு தகுதி உள்ளது. எரிபொருள் விலை குறைப்பு என்று அறிவித்து மக்களை முட்டாளாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Central govt, Petrol Diesel Price, Rahul gandhi