Home /News /national /

பழங்குடியின மக்கள் மேம்பாட்டிற்காக பிரதான் மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு 

பழங்குடியின மக்கள் மேம்பாட்டிற்காக பிரதான் மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம் - மத்திய அமைச்சர் அறிவிப்பு 

ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா

ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா

PM Aadi Adarsh Gram Yojana: பழங்குடியின கிராமங்களில் 41 அமைச்சகங்களின் பல்வேறு திட்டங்களை ஒன்றிணைத்து பிரதான் மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா மூலம் பழங்குடியினர் வளர்ச்சியை உறுதி செய்வதில் கவனம் செலுத்த இருக்கிறது

பழங்குடியின கிராமங்களின் விரிவான வளர்ச்சிக்காக "பிரதான் மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா" என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். 

மகாத்மா காந்தியின் கூற்றுப்படி கிராமங்கள் தான் நாட்டின் அடிப்படைக் கூறுகள். அதுவும் பழங்குடிகள் என்பவர்கள்  பழமையான பாரம்பரிய தன்மையில் இருந்து மாறுபடாமல் இன்றும் அந்த மண்ணோடு இணைந்து வாழ்பவர்கள். மலை, மலை சார்ந்த இடங்களில்  இருந்து கிடைக்கும் விறகு, தேன், மணிகள், கிழங்குகள் ஆகியவற்றை விற்று அதை வைத்து வாழ்பவர்கள். அவர்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்பது அரசின் முக்கிய பணியாகும்.



ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள பவானிபட்னாவில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடியின கிராமங்களில் 41 அமைச்சகங்களின் பல்வேறு திட்டங்களை ஒன்றிணைத்து பிரதான் மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா மூலம் பழங்குடியினர் வளர்ச்சியை உறுதி செய்வதில் கவனம் செலுத்த இருப்பதாகக் கூறினார்.

சிறைக் கைதிகளை கொண்டு இயங்கும் பெட்ரோல் பங்க் - ஹரியானா அரசு புதிய முயற்சி

கிராமங்களை செறிவூட்டும் நிலைக்கு கொண்டு செல்வதே அரசின் நோக்கம். நாட்டின் தொலைதூர மற்றும் பின்தங்கிய கிராமங்கள் மீது அரசின் கவனம் குறைவாக உள்ளது. அந்த கவனக்குறைவால் பின்தங்கிய கிராமங்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க வேண்டும். அது அரசின் முக்கிய கடமை. ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா அந்த வளர்ச்சியை உறுதி செய்வதையே குறிக்கோளாக கொண்டு இயங்கவுள்ளது.

பழங்குடியினரின் கூட்டமைப்பான TRIFED மூலம் பழங்குடியினப் பொருட்களுக்கான புவி-குறியிடல் மற்றும் சந்தை இணைப்புகளை உறுதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Govt Scheme, Odisa village, Welfare scheme

அடுத்த செய்தி