• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே உச்சக்கட்ட மோதல்

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே உச்சக்கட்ட மோதல்

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

Govt invokes Section 7 RBI Act 1991, 1997, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பிரிவு 7 பயன்படுத்தப்பட்டதில்லை என்றும், ஆர்.பி.ஐ. மீது சட்டப்பிரிவு 7-ஐ பயன்படுத்துவது வரலாற்றில் நடந்திராத ஒன்று என்று ப. சிதம்பரம் ட்விட்

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

அரசின் உத்தரவுகளை அமல்படுத்த ஆர்பிஐயின் சட்டப்பிரிவு 7- ஐ பயன்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணபுழக்கத்தை அதிகரிப்பது, வங்கிகள் மீதான அழுத்தத்தை குறைப்பது, பொருளாதார வளர்ச்சியை பெருக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகிறது.

ஆனால் ரிசர்வ் வங்கி இதற்கு செவி சாய்க்கவில்லை. இதன் காரணமாக ஆர்பிஐ சட்டப்பிரிவு 7- ஐ பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்பிஐ-யின் 83 ஆண்டு கால வரலாற்றில் எந்த அரசும் சட்டப்பிரிவு - 7 ஐ பயன்படுத்தியதில்லை. இந்த தகவல் குறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், சட்டப்பிரிவு 7 -ஐ பயன்படுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என கூறியுள்ளார்.





மேலும் 1991, 1997, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பிரிவு 7 பயன்படுத்தப்பட்டதில்லை என்றும், ஆர்.பி.ஐ. மீது சட்டப்பிரிவு 7-ஐ பயன்படுத்துவது வரலாற்றில் நடந்திராத ஒன்று என்றும் கூறியுள்ளார். தற்போது ஆர்.பி.ஐ. மீது சட்டப்பிரிவு 7-ஐ பயன்படுத்த என்ன காரணம் என வினவியுள்ள சிதம்பரம், பொருளாதார நிலை குறித்து உண்மையான நிலவரத்தை மத்திய அரசு மறைக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

Also see....

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: