ஹோம் /நியூஸ் /இந்தியா /

பண மதிப்பு நீக்கத்தால் 4 பேர் பலி: நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி ஒப்புதல்!

பண மதிப்பு நீக்கத்தால் 4 பேர் பலி: நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி ஒப்புதல்!

அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி

பண மதிப்பு நீக்கத்தின்போது, பணத்தை மாற்ற வங்கியில் வரிசையில் நின்றபோது உயிரிழந்தவர்கள், வங்கி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வேலைப் பளுவால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கேள்வி எழுப்பினார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பண மதிப்பு நீக்கத்தின் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

  பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அது, நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிறு, குறு தொழில்கள் கடுமையாக முடங்கியது என்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

  இருப்பினும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் உயிரிழந்தவர்கள் குறித்து மத்திய அரசு இதுவரையில் ஏதும் தெரிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக பண மதிப்பு நீக்கத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார். இன்று மாநிலங்களவையில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் எம்.பி இளமாறம் கரீம், ‘பண மதிப்பு நீக்கத்தின்போது, பணத்தை மாற்ற வங்கியில் வரிசையில் நின்றபோது உயிரிழந்தவர்கள், வங்கி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வேலைப் பளுவால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கேள்வி எழுப்பினார்.

  அதற்கு பதிலளித்த அருண் ஜெட்லி, ‘எஸ்.பி.ஐ வங்கியைத் தவிர்த்து வேறு எந்த பொதுத்துறை வங்கிகளிலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. எஸ்.பி.ஐ வங்கியில் மூன்று வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்தால் தொழிற்துறை, வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அரசு சார்பில் ஏதும் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

  Published by:Karthick S
  First published:

  Tags: Arun Jaitely, Demonetisation