ஹோம் /நியூஸ் /இந்தியா /

பீகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் சவால்களை சந்திக்கும் அரசு!

பீகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் சவால்களை சந்திக்கும் அரசு!

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பீகார் வந்த அரசு பேருந்தில் வெளிநாட்டு மதுபானங்களை கடத்தி வந்த டிரைவர் உள்ளிட்ட 6 பேர் பிடிபட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பீகாரில் பூரண மதுவிலக்கு தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அம்மாநில அரசு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. அவற்றை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதை தடுக்க தீவிரமாக வாகன சோதனை நடத்தப்படுகிறது.

Also read:  மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள்

அவ்வகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பீகார் வந்த அரசு பேருந்தில் வெளிநாட்டு மதுபானங்களை கடத்தி வந்த டிரைவர் உள்ளிட்ட 6 பேர் பிடிபட்டுள்ளனர்.

லக்னோவில் உள்ள சார்பாக் டெப்போவில் இருந்து புறப்பட்ட அந்த பேருந்து முசாபர்நகரை அடைந்ததும் அந்த பேருந்தில் கலால்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் 194 வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், அவற்றை கடத்தி வந்ததாக பேருந்தின் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.

பீகாரில் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பூரண மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் மதுவிலக்கு தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. குறிப்பாக அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளத்தில் இருந்து மது கடத்தப்படுவதை தடுப்பதில் அரசு கடும் சவால்களை சந்தித்து வருகிறது.

Also read:   வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏவுக்கு ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்..

First published:

Tags: Bihar