மத்திய அரசைக் கண்டித்து அரசு ஊழியர்கள் இன்றும் போராட்டம்!

சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

news18
Updated: January 9, 2019, 1:44 PM IST
மத்திய அரசைக் கண்டித்து அரசு ஊழியர்கள் இன்றும் போராட்டம்!
தொடரும் போராட்டம்... வெரிச்சோடி கணப்படும் பேருந்து நிலையம்
news18
Updated: January 9, 2019, 1:44 PM IST

மத்திய அரசைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் அரசு ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை 2-வது நாளாக பாதிக்கப்பட உள்ளது.

விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்து, நாடுதழுவிய அளவில் 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முதலாவது நாளான நேற்று, அனைத்து துறை அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறை ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தைப் பொருத்தவரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

எனினும், சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர். கேரளாவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகளும் இயங்காததால், தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

இதேபோல, கர்நாடகா செல்லும் பேருந்துகளும் ஒசூர் பேருந்து நிலையம் வரையே இயக்கப்பட்டன. புதுச்சேரியில் வணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், பேருந்துகளும் இயங்கவில்லை.

நாடு முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து, இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தம் தொடர்கிறது.

Also see...

 

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...