முகப்பு /செய்தி /இந்தியா / பெட்ரோல், டீசல் மூலம் 8 லட்சம் கோடி ரூபாய் வருமானம் - நிர்மலா சீதாராமன் தகவல்

பெட்ரோல், டீசல் மூலம் 8 லட்சம் கோடி ரூபாய் வருமானம் - நிர்மலா சீதாராமன் தகவல்

Nirmala Sitharaman

Nirmala Sitharaman

2021 நிதியாண்டில் மட்டும் 3.71 லட்சம் கோடி ரூபாய் கலால் வரி வருவாய் கிடைத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

கடந்த 3 நிதியாண்டுகளில் பெட்ரோல் டீசல் விற்பனை மூலம் 8 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு மற்றும் அதில் இருந்து ஈட்டப்பட்ட வருமானம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த கடந்த 3 நிதியாண்டுகளில் பெட்ரோல் டீசல் விற்பனை மூலம் 8 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 3 நிதியாண்டுகளில் 8.02 லட்சம் கோடி ரூபாய் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் இருந்து வருவாயாக கிடைத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2021 நிதியாண்டில் மட்டும் 3.71 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ராஜ்யசபாவில் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 5, 2018-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரி 19.48 ரூபாயாக இருந்தது, அது நவம்பர் 4 2021-ல் லிட்டருக்கு 27.90 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே போல டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 15.33 ரூபாயாக இருந்தது, அது 21.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Also read:   77 நாடுகளில் ஒமைக்ரான்.. நினைத்துப் பார்க்காத வேகத்தில் பரவுகிறது - உலக சுகாதார அமைப்பு கவலை

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி கடந்த பிப்ரவரி 2, 2021 வரை ரூ.32.98 (பெட்ரோல்), ரூ. 31.83 (டீசல்) என தொடர்ந்து அதிகரித்து வந்தது. பின்னர் நவம்பர் 4,2021-ல் அவை லிட்டருக்கு ரூ. 27.90 (பெட்ரோல்), ரூ.21.80 (டீசல்) என குறைந்தது.

கடந்த 3 ஆண்டுகளில் செஸ் வரி உட்பட மத்திய அரசுக்கு கிடைத்த கலால் வரி என்பது 2018-19 காலகட்டத்தில் ரூ.2,10,282 கோடியாகவும், 2019-20 காலகட்டத்தில் ரூ.2,19,750 கோடியாகவும், 2020-21 காலகட்டத்தில் ரூ. 3,71,908 கோடியாகவும் இருந்தது.” இவ்வாறு நிர்மலா சீதாராமன் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

Also read:  கணவரின் பிறப்புறுப்பை துண்டித்த இளம் மனைவி - செக்ஸ் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்திய கணவருக்கு நேர்ந்த சோகம்..

top videos

    தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 4 ஆம் தேதியன்று, பெட்ரோல் , டீசல் மீதான கலால் வரியை பெட்ரோல் லிட்டருக்கு தலா 5 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 10 ரூபாய் எனவும் மத்திய அரசு குறைத்தது. மத்திய அரசை பின்பற்றி பல்வேறு மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Nirmala Sitharaman, Petrol Diesel Price