ரபேல் குறித்து பொய்யான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் அளிக்கவில்லை!

ஊடக ஆவணங்களுக்கும் சி.ஏ.ஜி. அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Tamilarasu J | news18
Updated: May 10, 2019, 2:08 PM IST
ரபேல் குறித்து பொய்யான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் அளிக்கவில்லை!
ரஃபேல்
Tamilarasu J | news18
Updated: May 10, 2019, 2:08 PM IST
ரபேல் வழக்கில் பொய்யான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் அளிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் ரபேல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில், மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், ரபேல் வழக்கில் பொய்யான தகவல் அளிக்கவில்லை, ஊடகங்களில் வெளியான ஆவணங்களைக் கொண்டு மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


ஊடக ஆவணங்களுக்கும் சி.ஏ.ஜி. அறிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஊடக ஆவணங்களில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை,

பல்வேறு படிநிலைகளில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தானதில் தவறு இல்லை என சி.ஏ.ஜி. அறிக்கை கூறியுள்ளது.

மேலும், அதிகாரப்பூர்வமான சி.ஏ.ஜி. அறிக்கையை விடுத்து ஊடக ஆவணங்கள் முன்னுதாரணம் காட்டப்பட்டுள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Loading...

மேலும் பார்க்க:
First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...