ஜம்மு காஷ்மீர் மாநில விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்களை மத்திய அரசு வாங்கிக் கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் இன்னும் இயல்பு நிலை திரும்பாத சூழல் உள்ளது. இன்னமும் காஷ்மீரின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கிறது. தொலைதொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த வாரம் காஷ்மீர் மாவட்ட கிராமத் தலைவர்களும் விவசாயிகளின் பிரதிநிதிகளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருந்தனர். அப்போது, அவர்கள் விளைவிக்கப்பட்ட ஆப்பிளை விற்க முடியாத சூழல் உள்ளது’ என்று தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சோபூர், பரிம்போரா, சோபியன், படென்கோ ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்கள் பெற்றுக்கொள்ளப்படும். சிறப்பு சந்தை தலையீடு விலைத் திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநில ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும். 12 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும். தேசிய விவசாய கூட்டுறவு சந்தை அமைப்பு ஆப்பிள் கொள்முதல் நடைமுறையை மேற்கொள்ளும்.
மத்திய உள்துறை அமைச்சகமும், விவசாயத்துறை அமைச்சகமும் இதனை சீராக நடைமுறைப்படுத்தும். மானியங்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நேர்மையான ஆப்பிள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும். ஏ, பி, சி என்ற எல்லா தர ஆப்பிள்களும் கொள்முதல் செய்யப்படும். மாநிலத் தலைமைச் செயலாளர் இந்த செயல்பாட்டுக்குத் தலைமைவகிப்பார். மேலும், அமைப்புகளை ஒருங்கிணைப்பார். விலைவாசிக் குழு, ஆப்பிள்களுக்கான விலையை நிர்ணயிப்பார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மறுத்த ஆப்பிள் உற்பத்தியாளர் முகமது அஷ்ரப் தர் மற்றும் அவரது ஐந்து வயது பெண் குழந்தை உள்பட குடும்பத்தினரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kashmir