Home /News /national /

டோல்கேட் இனி இருக்காது, ஆனால் புது ட்விஸ்ட் - மத்திய அமைச்சர் அறிவிப்பு

டோல்கேட் இனி இருக்காது, ஆனால் புது ட்விஸ்ட் - மத்திய அமைச்சர் அறிவிப்பு

டோல் பிளாசா

டோல் பிளாசா

2018-19 ஆம் ஆண்டில், சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்களாக இருந்தது.FASTags அறிமுகப்படுத்த பிறகு 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாயன்று, டோல் பிளாசாக்களுக்குப் பதிலாக தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார முறையை கொண்டு வருவதற்கான முன்னோடித் திட்டங்களை அரசாங்கம் நடத்தி வருவதாகவும், இதன் மூலம் வாகன உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து கட்டணத்தை நேரடியாக பிடித்தம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

மைண்ட்மைன் உச்சிமாநாடு, அரசியல் , தொழில், வளர்ச்சி, பொருளாதாரம், நாட்டின் முன்னேற்றம் குறித்து கல்வியாளர்கள், கட்டுரையாளர்கள், செய்தி தொகுப்பாளர்கள், இளம் தொழில்முனைவோர் , தலைவர்கள் போன்றோரின் உரையாடல் மற்றும் விவாதத்திற்கான ஒரு மன்றமாகும். மைண்ட்மைன் உச்சிமாநாட்டின் 2022 பதிப்பு செப்டம்பர் 13 மற்றும் 14, 2022 ஆகிய தேதிகளில் புது தில்லியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் கட்காரி பேசுகையில், FASTags அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) சுங்கச்சாவடி வருமானம் ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், "இப்போது, ​​நாங்கள் ஆட்டோமொபைல் நம்பர் பிளேட் தொழில்நுட்பத்தை (தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்) அறிமுகப்படுத்த உள்ளோம், இதன் மூலம் டோல் பிளாசாக்கள் இருக்காது," என்றார்.

தொலைந்து போன பொருட்களை பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்திய மங்களூரு விமான நிலையம்

2018-19 ஆம் ஆண்டில், சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்களாக இருந்தது. 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் FASTags அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் இப்போது 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது.

காத்திருப்பு நேரத்தில் இது கணிசமான முன்னேற்றம் என்றாலும், சில இடங்களில், குறிப்பாக நகரங்களுக்கு அருகில், மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், பீக் ஹவர்ஸின் போது சுங்கச்சாவடிகளில் இன்னும் சில தாமதங்கள் உள்ளன.

இந்த தாமதங்களைக் குறைக்க 2 வழிமுறைகளை அரசாங்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஒன்று செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் அமைப்பு, அதில் ஒரு காரில் ஜிபிஎஸ் இருக்கும். அந்த ஜிபிஎஸ் மூலம் தூரங்களை கணக்கிட்டு பயணிகளின் வங்கிக் கணக்கிலிருந்து கட்டணம் நேரடியாகக் கழிக்கப்படும்

பயணிகள் கவனத்திற்கு.. பெட்வா நதிக்கரை நகரமான ஓர்ச்சாவில் உள்ள சிறந்த இடங்கள்!

மற்றொன்று தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார முறை மூலம் அந்த சாலையில் சென்ற வாகனங்களின் எண்கள் கொண்டு அதன் பயனாளிகளின் கணக்கில் இருந்து கட்டணம் கழிக்கப்படும்.

நாங்கள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதிகாரப்பூர்வமான முடிவை இன்னும் எடுக்கவில்லை என்றாலும், நம்பர் பிளேட் தொழில்நுட்பம் வருவதன் மூலம் டோல் பிளாசா இருக்காது. அதிநவீன கணினிமயமாக்கப்பட்ட டிஜிட்டல் அமைப்பு மூலம் வரிசைகள் , காத்திருப்புகள் இருக்காது என்று கட்கரி கூறினார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Nitin Gadkari, Toll Plaza

அடுத்த செய்தி