ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக வரும் 26ம் தேதி அணைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவப் படைகளைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். விரைவில் அவர்கள் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்நிலையில், தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள், சிறுபான்மையினர் உரிமைகள் பாதிக்கப்படும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தாலிபான்களின் முந்தைய ஆட்சியில் இருந்தது போன்று கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்ற அச்சமும் மக்களிடையே உள்ளதால் பலரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இவர்களுக்கு அமெரிக்கா, கனடா, இந்தியா, ஈரான்,பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடைக்கலம் வழங்கி வருகின்றன.
மேலும் படிக்க: கொரோனா மூன்றாம் அலை அக்டோபரில் உச்சம் தொடும்... பிரதமர் அலுவலகத்தில் நிபுணர்கள் அறிக்கை
நேற்று ஒரே நாளில் 329 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து மூன்று விமானங்களில் மீட்கப்பட்டுள்ளனர். வருகிற 31-ந் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிடும். அதற்குள் எஞ்சியுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரயில்வேக்கு ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு - மத்திய அமைச்சர் தகவல்
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பர்ஹட் ஜோஷி இது தொடர்பான கூடுதல் விரங்களை விரைவில் வெளியிடுவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வரும் 26ம் தேதி நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.