பாஜக ஆட்சியில் இல்லாத மாநில ஆளுநர்களுடன் அமித் ஷா சந்திப்பு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநில ஆளுநர்களுடன் அமித் ஷா சந்திப்பு!
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • News18
  • Last Updated: June 11, 2019, 1:37 PM IST
  • Share this:
பாஜக ஆட்சியில் இல்லாத மாநில ஆளுநர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதில் ஏழு பேர் விடுதலை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இதேபோல் மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, ஆந்திர ஆளுநர் நரசிம்மன், அருணாச்சல் பிரதேச ஆளுநர் பி.டி. மிஸ்ரா, ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மு ஆகியோரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர்.


பாஜக ஆட்சி இல்லாத தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் ஒரே நாளில் உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் பார்க்க:
First published: June 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading