2023 ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ளதை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 200 நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு கோலாகலமாக நிகழ்ச்சி தொடங்கியது.இதில், உலக நாடுகளின் பிரதிநிதிகளை தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசுவதாக இருந்தது.
ஆனால், திடீரென அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு, அவசர அவசரமாக மாலை 4.30 மணிக்கு மீண்டும் விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார். இது குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரிகளிடம் கேட்ட போது, தெலங்கானாவில் நடைபெற உள்ள சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக அவசர அழைப்பு வந்ததால், ஐதராபாத் புறப்பட்டுச் சென்றதாக கூறப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamilisai Soundararajan, Telangana