மேற்குவங்கத்தில் சட்டத்தின் ஆட்சி அமலில் இல்லை எனவும் ஆட்சியாளர்களின் சட்டம் தான் அமலில் இருப்பதாகவும் அம்மாநில ஆளுநர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆளுநருக்கும் ஆட்சியாளர்களுக்குமான மோதல் அவ்வப்போது வெளிப்படுவது உண்டு. ஏற்கனவே கிரண் பேடி டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்த போது, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆளுநருக்கும் இடையே அடிக்கடி உரசல்கள் ஏற்படுவது உண்டு. இதே போல மேற்குவங்கத்திலும் மாநில அரசுக்கும், ஆளுநருக்குமான உரசல் தொடர்கதையாகி வருகிறது. ஆளுநர் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியும், முதல்வர் குறித்து ஆளுநரும் தங்கள் தரப்பு அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணமாகவே இருந்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கு ஆளும் தரப்பினர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர்.
Also read:
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது தீவிரமான பிரச்னை : உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!
மேற்குவங்க சட்டப்பேரவையில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஜக்தீப் தன்கர், செய்தியாளர்களிடையே பேசுகையில், மேற்குவங்கத்தின் சூழல் மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. இங்கு சட்டத்தின் ஆட்சி கிடையாது. ஆட்சியாளர்களின் சட்டம் தான் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு மேற்குவங்கத்தில் பாதுகாப்பில்லை. தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட வன்முறைகளை நாம் பார்த்தோம், கொள்ளையடித்தார்கள், கொலை செய்தார்கள், பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இந்த சமூகத்துக்கு அவமானம் தேடித் தந்தார்கள்.
எல்லோரும் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று நான் நிறைய முயற்சித்தேன். அரசு அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற மறந்துவிட்டனர். ஆனால், ஆளுநர் மாளிகையால் என்ன செய்ய முடியும் என்று அவர்களுக்கு தெரியவில்லை.
Also read:
இன்று நீங்கள் புகைப்பிடித்தால் நாளை உங்கள் பேத்திகளுக்கு உடல் பருமன் ஏற்படும் - புதுமையான ஆய்வு!!
மாநில தலைமைச் செயலாளர் எனது தொலைபேசி அழைப்புகளை எடுப்பதில்லை. மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் தன்னை அனைத்துக்கும் மேலானவனாக கருதி சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடந்து கொள்கிறார்.. நான் முற்றிலும் வியப்படைகிறேன். மாநிலத்தில் மக்கள் ஆழ்ந்த அச்சத்தில் உள்ளனர், அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் கூட கவர்னர் நிகழ்ச்சியில் பங்கேற்க தயங்குகின்றனர்.
ஆளுநரின் ஒப்புதலின்றி 25க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Also read: வக்கிர புத்தி படைத்த தந்தையால் மைனர் சிறுமிக்கு சேர்ந்த அவலம்!!
கடந்த வாரம் மாவட்ட நீதிபதிகள் பிரதமருடனான கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஒரு தனி நபரின் கட்டளையை பின்பற்றுவதது தானா அவர்களின் வேலை?
முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அரசியல் சாசன அறிவு இல்லை என்றும், அவருக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என்றும் ஆளுநர் குற்றம்சாட்டினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.