ஹோம் /நியூஸ் /இந்தியா /

தமிழ்நாடு ரொம்ப மோசம்... முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விமர்சனம்

தமிழ்நாடு ரொம்ப மோசம்... முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விமர்சனம்

பன்வாரிலால் புரோஹித்

பன்வாரிலால் புரோஹித்

ஏற்கனவே பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டின் கவர்னராக பதவி வகித்தபோது, மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட விவகாரம் கடும் எதிர்ப்பை கிளப்பியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Punjab | Tamil Nadu

  தமிழ்நாட்டில் துணை வேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்கப்பட்டு வந்தது என பகீரங்க குற்றச்சாட்டை பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முன்வைத்துள்ளார்.

  பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரி லால் புரோஹித், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் தமிழ்நாட்டில் தான் 4 ஆண்டுகள் கவர்னராக இருந்ததை குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் நிலை மிகவும் மோசம் என்றும் இங்கு பல்கலைகழக துணைவேந்தர் பதவி ரூ. 40 முதல் 50 கோடிக்கு விற்கப்பட்டு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

  மேலும், “ தமிழகத்தில் நான் 27 பல்கலைகழக துணை வேந்தர்களை சட்டப்படி நியமித்தேன். என்னிடம் இருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு பஞ்சாபில் யார் தகுதியானவர்கள் யார் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் தெரியாது. கல்வி தரம் உயர் வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம்” என தெரிவித்தார்.

  ஏற்கனவே இவர் தமிழ்நாட்டின் கவர்னராக பதவி வகித்தபோது, மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட விவகாரம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. கவர்னர் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என அப்போதைய எதிர்கட்சியாக இருந்த திமுக கருப்புக்கொடி காட்டியது குறிப்பிடத்தக்கது.

  மேலும் வாசிக்க: தெலங்கானாவில் ஜே.பி. நட்டாவுக்கு கல்லறை... பாஜக கடும் கண்டனம்

  மேலும் பல்கலைக்கழக வேந்தர் பதவியை கவர்னர் வகிக்கக்கூடாது என பல்வேறு மாநிலங்களில் குரல் எழுந்து வரும் நிலையில்,  தமிழக துணை வேந்தர் நியமனம் குறித்து பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Governor Banwarilal purohit, Punjab