Home /News /national /

ஊதியம் வழங்க தாமதம்... கேரளாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

ஊதியம் வழங்க தாமதம்... கேரளாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

கேரளாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

கேரளாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

protest in Kerala | கேரளாவில் இருந்து கன்யாகுமரி மாவட்டத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் அரசு போக்குவரத்து துறையில் சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான பணிமனைகளில் இருந்து மிக குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் இன்னல்களுக்குள்ளாகின்றனர். கேரளாவில் இருந்து கன்யாகுமரி மாவட்டத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஊதிய தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியுவைத் தவிர மற்ற அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கேஎஸ்ஆர்டிசியில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஏப்ரல் மாத சம்பளத்தை ஐந்தாம் தேதிக்கு முன்  வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து ஐஎன்டியுசி, பிஎம்எஸ், ஏஐடியுசி  போன்ற எதிர்க்கட்சி தொழில் சங்கங்களை சேர்ந்த  ஊழியர்கள் நேற்று  நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மாதம் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கலாம் எனவும், அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ  பேச்சுவார்த்தையின் போது  உறுதியளித்திருந்தார். ஆனால் இதை ஏற்க மறுத்து போராட்டத்திற்கு ஐஎன்டியுசி, பிஎம்எஸ், ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள பேருந்துகள்


தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து அமைச்சர் வியாழக்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஊதியம் வழங்கும் தேதியில் எந்த உத்தரவாதமும் வழங்க அரசு தவறியதாக தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை குற்றம் சாட்டின. இதனிடையே, தொழிற்சங்கங்களின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ள வேலைநிறுத்தம், கே.எஸ்.ஆர்.டி.சி.யை மேலும் நிதி நெருக்கடியில் தள்ளும் என அமைச்சர் ஆண்டனி ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Kanyakumari, Kerala

அடுத்த செய்தி