முகப்பு /செய்தி /இந்தியா / மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பை உறுதி செய்யுங்கள் : மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அலெர்ட்

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பை உறுதி செய்யுங்கள் : மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அலெர்ட்

ஆக்சிஜன் சிலிண்டர்

ஆக்சிஜன் சிலிண்டர்

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மருத்துவமனைகளில் ஆக்சிஜனை போதிய இருப்பு வைத்துக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய வகை BF-7 எனப்படும் உருமாறிய கொரோனா சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து வரும் இந்தியர்களில் 2 சதவீதம் பேருக்கு விமான நிலையங்களில் ரேண்டமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஏர் சுவிதா என்னும் படிவத்தை நிரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா வந்த பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் XBB வகை கொரோனாதான் உறுதியாகி வருகிறது : மா.சுப்பிரமணியம் விளக்கம்!

தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆக்சிஜனை போதிய இருப்பு வைத்துக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: CoronaVirus, Omicron BF 7 Variant, Oxygen cylinder