• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Cryptocurrency Bill | தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை- மசோதா கொண்டுவரும் மத்திய அரசு

Cryptocurrency Bill | தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை- மசோதா கொண்டுவரும் மத்திய அரசு

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சியை (Cryptocurrency) வாங்குவதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் ஒருபக்கம் உள்ளபோதும், இத்தகைய கரன்சிகள் மூலம் டார்க் வெப்பில் (Dark web) போதைப்பொருள் விற்பனை, ஆயுத  விற்பனை போன்றவையும் அதிகரித்து வருகிறது

  • Share this:
    தனியார் கிரிப்டோ கரன்சியை தடை செய்யும்  சட்ட மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சியை உருவாக்கவும் இந்த மசோதாவில்  வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 29ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில்,  கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுபாடு மசோதா 2021 (The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021) என்ற மசோதாவும் அடக்கம்.

    இந்த மசோதாவில் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளை தடை செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க கட்டமைப்பை ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. 2009ம் ஆண்டு பிட் காயின் வருகைக்கு பின்னர் கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி அபரிமிதமாக  சென்றது. அப்போது நூறு ரூபாய்க்கும் குறைவாக இருந்த ஒரு பிட் காயின் (Bitcoin) மதிப்பு தற்போது 50 லட்சத்துக்கும் மேல்.

    கிரிப்டோகரன்சியை வாங்குவதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் ஒருபக்கம் உள்ளபோதும், இத்தகைய கரன்சிகள் மூலம் டார்க் வெப்பில் (Dark web) போதைப்பொருள் விற்பனை, ஆயுத  விற்பனை போன்றவையும் அதிகரித்து வருகிறது.

    இத்தகைய சூழலில் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்தே கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: