வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் திரிபுராவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை மேகாலயா தலைநகர் ஷில்லாங்க் வந்த பிரதமர் மோடி, மாநில கன்வென்சன் மைய அரங்கத்தில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எட்டு வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த விழா கூட்டத்தில் பங்கேற்றனர். அதன்பிறகு, ஷில்லாங்கில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர், ரூ.2,450 கோடி மதிப்பிலானப் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த எட்டு ஆண்டுகளில் வடகிழக்கு குறித்த பார்வையும் மனநிலையும் பெரும் மாற்றத்தை கண்டுள்ளது.கால்பந்து போட்டியில் தவறான நோக்கத்துடன் ஆடுபவர்களை ரெட் கார்டு கொடுத்து நடுவர் வெளியே அனுப்பிவிடுவார். அப்படி தான் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த ஊழல், கிளர்ச்சி, அரசியல் சந்தர்ப்பவாதம், வளர்ச்சியின்மை ஆகியவற்றுக்கு அரசு ரெட் கார்டு கொடுத்து அகற்றியுள்ளது.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி இல்லை என்றால் குஜராத்திலும் பாஜகவை தோற்கடித்திருப்போம் - ராகுல் காந்தி கருத்து
வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாட்டில் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் வடகிழக்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரை உலகம் முழுவதும் ஆர்வத்துடன் மக்கள் பார்த்து வருகின்றனர். இதுபோன்ற சர்வதேச போட்டிகள் இந்தியா நடத்தி மூவர்ண தேசிய கொடியை உயரப் பறக்கவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்று பேசினார்.
Last year I got an opportunity to visit His Holiness the pope and I invited him to India too.
The meeting was an opportunity to discuss topics that are threatening human kind and we decided that unity and self-co-existence can bring welfare.
- PM @narendramodi pic.twitter.com/SzZyRKTR6p
— BJP (@BJP4India) December 18, 2022
மேகாலயா மாநில ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் திரிபுரா புறப்பட்டு சென்றார். அங்கு அவர், ரூ.4,350 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், நிறைவடைந்தப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.