Home /News /national /

மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி ஆசிரியர் சஸ்பென்ட் - போலீஸ் வலைவீச்சு

மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி ஆசிரியர் சஸ்பென்ட் - போலீஸ் வலைவீச்சு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தலைமறைவாகியுள்ள அரசு பள்ளி ஆசிரியரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

    கர்நாடகா மாநிலத்தின் அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகள் மற்றும் அவரது தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் அங்கு பயின்று வரும் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார்.

    இவர் மீது மேலோட்டமான புகார்கள் வந்து கொண்டிருந்த நிலையில், ஒரு மாணவியின் தாயாருக்கே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த மாணவிக்கு டியூஷன், அரசு உதவிகள் உள்ளிட்டவற்றை செய்து தருவதாகக் கூறி அவரின் தாயரை வற்புறுத்தி பாலியில் உறவில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அதை வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்து வந்துள்ளார்.

    தனக்கு ஒத்துழைக்காவிட்டால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியும் உள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் அவரின் பேச்சை கேட்காததால் அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கராடாகி காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: வேறு வழியில்லை.. போதைக்கு அடிமையான மகனை சங்கிலி போட்டு கட்டிய பெற்றோர்

    இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், அந்த ஆசிரியர் பல்வேறு மாணவிகளிடம் இது போன்ற பாலியல் அத்துமீறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசு பள்ளி ஆசிரியரை கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், தலைமறைவாகியுள்ள ஆசிரியரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Sexual abuse, Sexual harrasment

    அடுத்த செய்தி