முகப்பு /செய்தி /இந்தியா / முகலாய தோட்டம் இனி ‘அம்ரித் உதயன்’.. பெயர் சூட்டினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ!

முகலாய தோட்டம் இனி ‘அம்ரித் உதயன்’.. பெயர் சூட்டினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ!

அம்ரித் உதயன்

அம்ரித் உதயன்

இதைத்தொடர்ந்து அம்ரித் உதயன் தோட்டம் இன்று முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் உள்ள முகலாயத் தோட்டத்திற்கு 'அம்ரித் உதயன்' (Amrit Udyan) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாயர் தோட்டம் என அழைக்கப்பட்டு வந்த தோட்டத்திற்கு "அம்ரித் உதயன்" என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெயர்சூட்டி உள்ளார்.

இதைத்தொடர்ந்து அம்ரித் உதயன் தோட்டம் இன்று முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகைகளை ஆய்வு செய்தார். அதன்பின் தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் ரோஜா, டாஹ்லியா உள்ளிட்ட மலர்களை ஆர்வமுடன் பார்வையிட்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

உதயன் தோட்டத்தை செவ்வாய்க்கிழமை முதல் மார்ச் 21-ம் தேதி வரை நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து பார்வையிடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: BJP, Draupadi Murmu, President