விவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசு தயார்: அமித் ஷா
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா
- News18 Tamil
- Last Updated: November 29, 2020, 12:21 PM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
இருப்பினும் விவசாயிகள் போராட்டம் வலுத்ததையடுத்து, அவர்களை டெல்லிக்குள் செல்ல காவல்துறையினர் அனுமதியளித்தனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
மேலும் படிக்க...டிசம்பர் 1, 2, 3-ம் தேதிகளில் தென்தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு ஆனால், விவசாயிகளோ, ஜந்தர் மந்தர் மற்றும் ராம் லீலா மைதானத்தில்தான் போராட்டம் நடத்துவோம் என்று தீர்மானமாக இருக்கின்றனர். இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டிளித்த அமித் ஷா, விவசாயிகள் சங்கத்தினருடன் வரும் 3-ம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். அதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் விரும்பினால், அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் 3-ம் தேதிக்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினால், அரசு அனுமதித்துள்ள இடத்துக்கு மாறிய அடுத்த நாளிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளிப்பதாக அமித் ஷா தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசியவர் விவசாயிகளின் கோரிக்கைகளையும், ஒவ்வொரு பிரச்சினைகளையும் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இருப்பினும் விவசாயிகள் போராட்டம் வலுத்ததையடுத்து, அவர்களை டெல்லிக்குள் செல்ல காவல்துறையினர் அனுமதியளித்தனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
மேலும் படிக்க...டிசம்பர் 1, 2, 3-ம் தேதிகளில் தென்தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு