ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண்களின் திருமண வயது 21ஆக உயர்வு

பெண்களின் திருமண வயது 21ஆக உயர்வு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெண்ணின் திருமண வயதை 21ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பெண்ணின் திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

  நாட்டில் தற்போது ஆணின் திருமண வயது 21ஆகவும், பெண்ணின் திருமண வயது 18ஆகவும் உள்ளது. பெண்களின் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாட்டை உறுதி செய்யும் பொருட்டு அவர்களின் திருமண வயது 21ஆக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் தனது சுதந்திர தின விழா உரையில் தெரிவித்திருந்தார்.

  Also Read : காதலியின் கணவரிடம் இருந்து தப்ப 5வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் மரணம்

  அதன்படி பெண்ணின் திருமண வயது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க நிதிஆயோக் செயற்குழுவை அமைந்திருந்தது. அந்த குழு தற்போது பெண்ணின் திருமண வயதை 21ஆக அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் இது நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட உள்ளது. பெண்ணின் திருமண வயது உயர்வதையடுத்து குழந்தை திருமணம் தடை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: BJP, India, Modi, Parliament, Woman