இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி விழிப்புணர்வு முன்னெடுப்பில் இணைகிறது உத்தர பிரதேச அரசு

கொரோனா தடுப்பூசி

Network18 மற்றும் Federal வங்கியால் வழிநடத்தப்படும் தடுப்பு மருந்து விழிப்புணர்வு முன்னெடுப்பான சஞ்சீவனி-உயிர் காக்கும் ஊசி என்ற திட்டத்தில் இணைந்தது UP அரசாங்கம்.

 • Share this:
  கிராமப்புறங்களில் தடுப்பு மருந்துத் தயக்கம் ஆழமாக வேரூன்றியுள்ளதை எதிர்ப்பதற்காகச் சமீபத்தில் Network18 மற்றும் Federal வங்கியால் வழிநடத்தப்படும் தடுப்பு மருந்து விழிப்புணர்வு முன்னெடுப்பான சஞ்சீவனி-உயிர் காக்கும் ஊசி என்ற திட்டத்தில் இணைந்தது UP அரசாங்கம். இந்தியாவின் மிகப் பெரிய தடுப்பு மருந்து விழிப்புணர்வு முன்னெடுப்பில் உடனுழைப்பதன்மூலம் யோகி அரசாங்கம் தன்னுடைய செயல்பாடுகளை மிகுதியாக்க எண்ணுகிறது, மேலும், இந்த மாநிலத்தில் 100% தடுப்பு மருந்து வழங்கலை இலக்காக அமைத்துள்ளது.

  கோவிட்-19 பிரச்சனை கொண்டோருடைய எண்ணிக்கை உயரத் தொடங்கியிருக்கிற, மூன்றாம் அலைபற்றிய அச்சம் சுற்றிவருகிற இந்த நேரத்தில், மாநில அரசுகள் பெரும் எண்ணிக்கையில் தடுப்பு மருந்துகளை வழங்கத் தயாராகின்றன. உத்தரப் பிரதேசம் ஏற்கெனவே தடுப்பு மருந்து வழங்கல் முன்னெடுப்பில் மற்ற மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளது, மேலும் சமீபத்தில் அது 5.50 கோடி மருந்துகளுக்குமேல் வழங்கி, இதுவரை 5,51,27,657க்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பு ஊசி போட்டு ஒரு மைல்கல்லைச் சாதித்துள்ளது.

  ஈர்க்கின்ற இந்த எண்கள் இருந்தபோதும், இந்த மாநிலத்தின் கிராமப்புற மக்கள் தொகையில் ஒரு பெரிய பிரிவு ஊசி போட்டுக்கொள்ள இன்னும் தயங்குகிறது. காரணம், தடுப்பு ஊசியைப்பற்றிய தவறான நம்பிக்கைகள், தவறான தகவல்களின் தாக்கம்தான். சஞ்சீவனியுடன் இணைந்து பணியாற்றுவதன்மூலம் இந்த மாநில அரசு தன்னுடைய வீச்சைக் கிராமப்புறப் பகுதிகளுக்கு விரிவாக்கும், மக்களுக்கு நுண்ணுணர்வை உண்டாக்கி, ஊசி போட்டுக்கொள்ளும்படி அவர்களைச் சம்மதிக்கவைக்கும்.

  சஞ்சீவனி 7 ஏப்ரல் 2021 அன்று அம்ரித்சர் அட்டாரி எல்லையில் தொடங்கப்பட்டது, தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவது, ஊசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்குவிப்பது ஆகியவை இதன் நோக்கங்கள். அடித்தட்டு நிலையில் தடுப்பு மருந்துத் தயக்கத்தை எதிர்க்கும் தன்னுடைய பணிக்காக இந்தப் பரப்புரை ‘சஞ்சீவனி காடி' என்ற வண்டியைத் தொடங்கியது, இந்த வண்டி கோவிட்-19ஆல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் பல கிராமங்களுக்குச் சென்றது. தடுப்பு மருந்து வழங்கலுக்கான பரப்புரையைச் சாலைக்குக் கொண்டுசென்ற இந்த வண்டி, அட்டாரியிலிருந்து தக்‌ஷின கன்னடாவரை 500க்கும் மேற்பட்ட கிராமங்களை எட்டியுள்ளது. வீட்டுக்கு வீடு சென்று பேசுதல், 24/7 வாட்ஸாப் மற்றும் அரட்டை ஆதரவு ஆகியவற்றின்மூலம், தடுப்பு மருந்து வழங்கல் விழிப்புணர்வைக் கடைத்தட்டு மக்களுக்குக் கொண்டுசெல்வதில் இந்தப் பரப்புரை ஒரு முக்கியப் பங்கு ஆற்றியுள்ளது.

  விழிப்புணர்வைப் பரப்புதல், கோவிட்-19 தடுப்பு மருந்து தொடர்பான தவறான நம்பிக்கைகளை உடைத்தல் ஆகியவற்றின்மூலம் இந்தக் கூட்டணி UPல் நடந்துவருகிற தீவிரமான தடுப்பு மருந்து வழங்கல் முன்னெடுப்புக்கு மேலும் உந்துதலை வழங்கும்.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: