ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெட்ரோலில் எத்தனால் கலப்பு.. ரூ.20,000 கோடி மிச்சம் - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பெட்ரோலில் எத்தனால் கலப்பு.. ரூ.20,000 கோடி மிச்சம் - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பயோ எத்தனால் ஆலை

பயோ எத்தனால் ஆலை

பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் ரூ.20,000 கோடி வரை இறக்குமதி செலவு குறைந்துள்ளதாக மத்திய அரசு மதிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா நாடுகளிலிருந்து இந்தியா, எண்ணெய் மற்றும் வாயுவை இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும் இறக்குமதி செலவை குறைத்து மாற்று எரிசக்தி முறை முன்னெடுக்கும் விதமாக பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

இது தொடர்பான முக்கிய புள்ளிவிவரத்தை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்  மக்களவையில் தெரிவித்துள்ளார். உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில் உள்ள தகவலின் படி, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் வகையில் 5 அம்ச உத்தியை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. அவை, உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரித்தல், எரிசக்தித் திறனை மேம்படுத்துதல், சேமிப்பு நடவடிக்கைகள், மாற்றுத் தேவைக்கு அழுத்தம் கொடுத்தல், உயிரி எரிபொருட்கள், மாற்று எரிபொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களுக்கு ஊக்கம் அளித்தல் ஆகியன ஆகும்.

அதன் முக்கிய நகர்வாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் கலப்பதற்காக 2022 நவம்பர் 15ம் தேதி வரை 385.92 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்துள்ளன. மேலும் 5.83 கோடி லிட்டர் பயோ டீசலை, டீசலுடன் கலப்பதற்காக 2022-23ஆம் நிதியாண்டில் இறக்குமதி செய்துள்ளன. 2022 நவம்பர் 15 வரை, பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் ரூ.20,000 கோடி வரை இறக்குமதி செலவு குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்.. தொடர்ந்து 4ஆவது முறையாக இடம் பிடித்தார் நிர்மலா சீதாராமன்

இரண்டாம் தலைமுறை எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்கும் பிரதமரின் ஜிவன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹரியானா மாநிலம் பானிபட்டில் அமைக்கப்பட்டுள்ள 2-ஜி எத்தனால் உற்பத்தி நிலையத்தை பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார். பஞ்சாப் மாநிலம் பத்தின்டா, ஒடிசா மாநிலம் பர்கார், அசாம் மாநிலம் நுமளிகார் ஆகிய இடங்களில் எத்தனால் நிலையங்கள் பல்வேறு நிலைகளில் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் கூறியுள்ளார்.

First published:

Tags: Petrol-diesel, Petroleum Minister