மேற்குவங்க மாநிலம் பர்த்வான் அடுத்த கேதுகிராம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சராபுல்-ரேணு காதுன் தம்பதி. சொந்தமாக மளிகை கடை நடத்தி குடும்பத்தை கவனித்து வந்துள்ளனர்.
தம்பதியர் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செவிலியரான ரேணு காதுன் தந்தை வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் ரேணுகாதுன் அரசு செவியர் தேர்வில் வெற்றிப்பெற்றதால் அரசு வேலை கிடைத்துள்ளது.
இதை கேள்விப்பட்ட ரேணுகாதுனின் கணவர் சராபுல் , ஏற்கனவே தன் பேச்சை மதிக்காத மனைவி அரசு வேலைக்கு சென்றால் மேலும் தன்னை மதிக்கமாட்டார் என்று நினைத்துள்ளார். அதற்காக மனைவியை அரசு வேலைக்கு செல்லகூடாது என்று மிரட்டியுள்ளார் .
ஆனால் பணியில் சேர்வதில் முனைப்பாக இருந்துள்ளார் ரேணு. இந்நிலையில் வீட்டில் நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த மனைவியை நண்பருடன் சேர்ந்து தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
அது முடியாததால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து நண்பனை மனைவியின் கைகளை பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு மணிக்கட்டுடன் சேர்ந்து கையை துண்டாக வெட்டியுள்ளார். அத்துடன் கையை தன்னுடன் எடுத்துச்சென்று ஒதுக்குப்புறமாக வீசிவிட்டு தப்பியுள்ளார்.
ரேணுவை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.